​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் பயிற்சி நிறுத்தி வைப்பு - அரசு அதிரடி உத்தரவு

Published : Jul 16, 2024 9:43 PM

ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் பயிற்சி நிறுத்தி வைப்பு - அரசு அதிரடி உத்தரவு

Jul 16, 2024 9:43 PM

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மஹாராஷ்டிராவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் பயற்சி நிறுத்தி வைத்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது இடத்தை பிடித்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர், பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்து, புனே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது உள்ளிட்ட அரசால் வழங்கப்படாத வசதிகளை அத்துமீறி பெற்றதாக பூஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் ஓ.பி.சி. சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக மற்றொரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

அடுக்கடுக்கான புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை அண்மையில் அமைத்தது.

இதைத் தொடர்ந்து பூஜா கேத்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்துள்ள அரசு, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஜூலை 23-ஆம் தேதிக்குள் முசோரி பயிற்சி மையத்திற்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.