​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கன்னியாகுமரியில் மழை மற்றும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடை

Published : Jul 16, 2024 11:53 AM

கன்னியாகுமரியில் மழை மற்றும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடை

Jul 16, 2024 11:53 AM

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் மழை பெய்வதாலும், பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாகவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதனால், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் குளச்சல், முட்டம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது.