​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
யூரோ கால்பந்து கோப்பையுடன் நாடு திரும்பிய ஸ்பெயின் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Published : Jul 16, 2024 7:23 AM

யூரோ கால்பந்து கோப்பையுடன் நாடு திரும்பிய ஸ்பெயின் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Jul 16, 2024 7:23 AM

யூரோ கால்பந்து இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையுடன் நாடு திரும்பிய ஸ்பெயின் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் மாட்ரிடில் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு வீரர்களை வரவேற்றனர்

சிபிலஸ் சதுக்கத்தில் நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா மேடை அருகே லட்சக்கணக்கில் திரண்டிருந்த ரசிகர்கள், ஸ்பெயின் தேசிய கொடியை ஏந்தியபடி உற்சாகத்தில் முழக்கமிட்டனர்