தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்ததற்கு எதிராக ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணையின் போது, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிகாரிகள் தவறிழைக்கவில்லை என எப்படி அறிக்கை அளிக்க முடியும் என்று சிபிஐ-க்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சுதந்திரமான விசாரணை அமைப்பின் முடிவு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-யின் கையாலாகாதனத்தை காட்டுவதாகவும் அதிருப்தி தெரிவித்தனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் புழு, பூச்சிகளை போன்று நசுக்கி உள்ளதாக கண்டித்த நீதிபதிகள், செல்வாக்கு மிக்க ஒரு நபருக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.