காவிரியில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி நீரை திறந்து விட ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட நிலையில், கர்நாடகா வெறும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறப்பதை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ள தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்றும், கர்நாடகாவின் 4 அணைகளில் நேற்றைய நிலவரப்படி தினசரி 3.15 டி.எம்.சி நீர் வரத்தும், அணைகளில் 77 டி.எம்.சி நீர் இருப்பும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.