​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூரில் ஒரு கிலோ பித்தளையை ரூ.13 லட்சத்திற்கு விற்பனை செய்த 2 தம்பதி கைது

Published : Jul 15, 2024 12:46 PM

திருப்பூரில் ஒரு கிலோ பித்தளையை ரூ.13 லட்சத்திற்கு விற்பனை செய்த 2 தம்பதி கைது

Jul 15, 2024 12:46 PM

திருப்பூர் அருகே வீரபாண்டியில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஆசைகாட்டி ஒரு கிலோ பித்தளை கட்டிகளை 13 லட்சம் ரூபாய்க்கு விற்ற ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த 2 ஜோடிகளை போலீசார் கைது செய்தனர்.

குண்டம்பாளையத்தில் ஸ்ருதி என்பவரின் மளிகைக்கடைக்கு பொருள் வாங்க வந்த போது நன்கு பேசிப் பழகிய முனுசுவாமி - குமாரி தம்பதி, தங்களிடம் ஒரு கிலோ தங்கம் உள்ளதாகக் கூறி, அதிலிருந்து வெட்டி எடுத்ததாக சிறிய உலோகத் துண்டை ஒன்றை கொடுத்துள்ளனர்.

அந்த உலோகத்தை சோதனை செய்த போது அது தங்கம் தான் என தெரிய வந்ததையடுத்து ஸ்ருதி ஒரு கிலோ கட்டிகளை வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதை விற்க முயற்சித்த போது, அது பித்தளை என தெரியவந்ததன் பேரில் ஸ்ருதி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பல்லடத்தில் தங்கியிருந்த முனுசுவாமி - குமாரியையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக ரவி, துர்கா என்ற மற்றொரு தம்பதியையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மேலும் 6 கிலோ பித்தளைக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.