விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கயிறு தயாரிக்கும் ஆலையில் வைக்கப்பட்டிருந்த தேங்காய் நார் குவியல்கள் நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்தன.
தீயணைப்பு வீரர்களும், அப்பகுதி மக்களும் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
நேற்றிரவு 2 தொழிலாளர்கள் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் எப்படி நெருப்பு பற்றியது என போலீசார் விசாரித்துவருகின்றனர்.