காஸாவில், பாலஸ்தீனர்கள் தங்குவதற்காக இஸ்ரேல் ராணுவத்தால் ஒதுக்கப்பட்ட பகுதி மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 90 பேர் உயிரிழந்தனர்.
ஹமாஸ் அமைப்பின் தலைமை தளபதியான முகமது டெய்ஃப் என்பவரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.
கடந்த கால் நூற்றாண்டாக அவரை பிடிக்க இஸ்ரேல் ராணுவம் முயற்சித்துவருவதாகவும், இஸ்ரேல் உளவுத்துறையின் கொலை முயற்சியில் இருந்து 7 முறை அவர் தப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.