ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை.. தாயையும் சேயையும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்
Published : Jul 13, 2024 8:09 PM
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை.. தாயையும் சேயையும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்
Jul 13, 2024 8:09 PM
பெங்களூரில் இருந்து பாட்னா சென்ற சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 9 மாத கர்ப்பிணிக்கு ரயிலிலேயே பெண் குழந்தை பிறந்தது.
பெங்களூருவில் கட்டிட வேலை செய்து வந்த பீகாரை சேர்ந்த மேத்தா காத்துன் தமது 4-வது பிரசவத்திற்காக ரயிலின் முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்த போது குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த ரயில்வே போலீசார் தாயையும், சேயையும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.