ஸ்க்ரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சலால் கட்டிட மேஸ்திரி பலி.. கிருமிநாசினி, கொசு மருந்து அடிக்கும் பணியில் சுகாதாரத் துறை
Published : Jul 13, 2024 3:01 PM
ஸ்க்ரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சலால் கட்டிட மேஸ்திரி பலி.. கிருமிநாசினி, கொசு மருந்து அடிக்கும் பணியில் சுகாதாரத் துறை
Jul 13, 2024 3:01 PM
ராசிபுரத்தை அடுத்த வெள்ளக்கல்பட்டியில் ஸ்க்ரப் டைபஸ் என்ற வைரஸ் காய்ச்சலால் கட்டிட மேஸ்திரி உயிரிழந்த நிலையில், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.
வீடு வீடாக சென்று வாளி, பேரல், பாத்திரங்களில் உள்ள நீரை கீழே ஊற்றிய அவர்கள், அப்பகுதியில் முகாம் அமைத்து மருத்துவ பரிசோதனையிலும் ஈடுபட்டனர்.
ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் மழை காலங்களில் பரவுவதாகவும் முறையாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.