எஞ்சிய இரண்டு எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை விரைந்து வழங்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்திருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் அக்டோபரில் வழங்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
400 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள வான் இலக்கையும் தரையில் இருந்தபடி துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட அதிநவீன எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க 2019 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது.
மொத்தம் 5 எஸ் 400 வாங்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அதில் மூன்று வழங்கப்பட்டு, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
எஞ்சிய இரண்டும் இந்த ஆண்டுக்குள் இந்தியாவிடம் வழங்க ரஷ்யா திட்டமிட்டிருந்த நிலையில், உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் தாமதமானதாக கூறப்படுகிறது.