இந்தியாவின் மக்கள்தொகை 2062ஆம் ஆண்டில் உச்சம் தொட்டபிறகு குறையத் தொடங்கும் என ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2062ல் இந்திய மக்கள்தொகை 170 கோடியை எட்டும் என்றும் அதன்பிறகு குறையத் தொடங்கி 2063ஆம் ஆண்டில் சுமார் ஒன்றேகால் லட்சம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2064 மற்றும் 2065ஆம் ஆண்டுகளில் முறையே சுமார் நான்கரை லட்சம், எட்டு லட்சம் என இந்திய மக்கள்தொகை குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
2054ஆம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா, சீனாவிற்கு அடுத்த இடத்தை பாகிஸ்தான் பிடிக்கும் என்றும் ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.