​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் இருந்து பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட இருந்த 2560 கிலோ அபாயகரமான அமில கப்பலை சென்னையில் தடுத்து நிறுத்திய சுங்கத்துறை

Published : Jul 12, 2024 6:56 AM

சீனாவில் இருந்து பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட இருந்த 2560 கிலோ அபாயகரமான அமில கப்பலை சென்னையில் தடுத்து நிறுத்திய சுங்கத்துறை

Jul 12, 2024 6:56 AM

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்குக் கப்பலில் அனுப்பப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகளைத் தயாரிக்கும் மூலப்பொருளான 2560 கிலோ கெமிக்கலை சென்னை அருகே சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், காட்டுப்பள்ளி  துறைமுகத்திற்கு, கடந்த மே மாதம் 8 ஆம் தேதி வந்து நின்றது.சென்னை சுங்கத்துறை அதிகாரிகள், அந்தக் கப்பலில் என்ன இருக்கிறது என்று ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்தக் கப்பலில்   ஒருவகை அமிலம் இருப்பது தெரியவந்தது. சரக்கு கப்பலில் 103 பேரல்களில் இருந்த, 2,560 கிலோ அபாயகரமான அமிலத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.