​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பான் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை சிரிப்பது கட்டாயம்

Published : Jul 11, 2024 9:42 PM

ஜப்பான் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை சிரிப்பது கட்டாயம்

Jul 11, 2024 9:42 PM

ஜப்பான் யமகட்டா மாகாணத்தில் வாழும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

யமகட்டா மருத்துவ பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிவியல் ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட அந்த சட்டத்தில், தினமும் சிரிப்பதன் மூலம்  மாரடைப்புக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும், சிரிப்பது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாளிலும் சிரிப்பை ஊக்குவிக்கும் வகையில் சிரிப்பு தினம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிரிப்பை கட்டாயமாக்குவது அடிப்படை உரிமை மீறல் என்று ஜப்பானிய எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.