உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மாஸ்கோ பயணத்தின்போது இந்தியா, ரஷ்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவலை வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இந்தியாவில் இருந்து பிரதமருடன் சென்றிருந்த உயரதிகாரிகள் குழு பங்கேற்க திட்டமிட்டிருந்த கூட்டம் ரத்தானதாக வெளியான தகவலில் உண்மையில்லை என வெளியுறவுத் துறை செயலர் வினய் கத்ரா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ரஷ்ய பயணத்தில் திட்டமிட்டிருந்த எல்லா நிகழ்ச்சிகளும் நடைபெற்றதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் விளக்கம் அளித்தார்.