தனது அதிபர் பதவிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் ஜோ பைடன் திறமையற்ற கமலா ஹாரிஸை அமெரிக்க துணை அதிபராக நியமித்துள்ளதாக டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
துணை அதிபர் பதவிக்கு 50 சதவீதம் தகுதியான ஒரு நபரை ஜோ பைடன் நியமித்திருந்தால் கூட, அந்நபர் இந்நேரம் அதிபர் பதவியை கைப்பற்றி, ஜோ பைடனை வீட்டிற்கு அனுப்பி இருப்பார் என ஃபுளோரிடாவில் ஆதரவாளர்களிடையே பேசிய அவர் தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் வசம் ஒப்படைக்கப்பட்ட அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவதை தடுத்து நிறுத்துதல், உக்ரைன் மீது ரஷ்யாவை போர் தொடுக்க விடாமல் செய்தல் ஆகிய இரு பொறுப்புகளிலும் அவர் தோல்வி அடைந்துவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உரையின் போது ஒரு முறை கூட கமலா ஹாரிசின் பெயரை டிரம்ப் சரிவர உச்சரிக்கவில்லை என டிரம்ப் எதிர்ப்பார்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.