​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோபிசெட்டிபாளையத்தில் போட்டோ ஸ்டுடியோவில் கள்ளச்சாவி போட்டு கம்ப்யூட்டர், பிரிண்டர், குறிப்பிட்ட ஒரு ஹார்டிஸ்க் மட்டும் திருட்டு

Published : Jul 10, 2024 12:13 PM

கோபிசெட்டிபாளையத்தில் போட்டோ ஸ்டுடியோவில் கள்ளச்சாவி போட்டு கம்ப்யூட்டர், பிரிண்டர், குறிப்பிட்ட ஒரு ஹார்டிஸ்க் மட்டும் திருட்டு

Jul 10, 2024 12:13 PM

கோபிசெட்டிபாளையம் அருகே, ஃபோட்டோ ஸ்டுடியோ ஒன்றில் இருந்து கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் குறிப்பிட்ட ஒரு ஹார்டிஸ்க் மட்டும் திருடு போன விவகாரத்தில், தொழில்போட்டி காரணமாக திருட்டு நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பகவதி ராஜா என்பவர் நடத்திவரும் ஸ்டூடியோ-வை நள்ளிரவில் கள்ளச்சாவி போட்டு திறந்த முகமூடி திருடன், அங்கிருந்த 2 கம்ப்யூட்டர்களில் ஒன்றையும், ஒரு பிரிண்டரையும் மூட்டை கட்டிவிட்டு, பின் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அங்கிருந்த 3 ஹார்ட் டிஸ்குகளில் ஒன்றை மட்டும் திருடிச் சென்றார்.