சென்னை, தியாகராய நகரில் சொத்துவரி பாக்கி வைத்திருந்த 43 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள், நிறுவனங்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக 1% தனி வட்டியுடன் சொத்து வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தவில்லை என பூட்டி சீல் வைக்கப்பட்ட கடைகளிலிருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.