​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்..!

Published : Jul 09, 2024 8:00 PM

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்..!

Jul 09, 2024 8:00 PM

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பாக மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று நாகை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.