சென்னை பரங்கிமலை ஜி.எஸ்.டி சாலையில் குத்தகை காலத்தையும் மீறி அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கல்லூரியின் ஒரு பகுதியை இடித்து, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குத்தகை காலத்தை கடந்த நிலம் என்பதால், ஆக்கிரமிப்பாக கருதி, அந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லூரி, பிரபல உணவகம் மற்றும் பிரியாணிக்கடைகளுக்கு அதிகாரிகள் கடந்த ஜனவரி 31ம் தேதி சீல் வைத்தனர்.
ஆனால், ரெமோ கல்லூரி நிர்வாகம் சார்பில், பெரியளவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள், பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டடம் கட்டிய ரெமோ கல்லூரி உரிமையாளர் ரித்திக் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீசில் புகார் அளிக்கப்படும் என பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.