காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் முதலில் யார் பாராயணம் பாடுவது என்பது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை இடையே அடிக்கடி ஏற்பட்டு வந்த மோதலுக்கு போலீஸார் தற்காலிக தீர்வு கண்டனர்.
விளக்கொளி பெருமாள் கோயில் குடமுழுக்கினை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி புறப்பாடின் போது பாராயணம் செய்வது தொடர்பாக குலுக்கல் நடத்தப்பட்டதில் வடகலையைச் சேர்ந்தவர்கள் முதலில் பாடுவது என சீட்டு வந்ததால் இருதரப்பினரையும் கயிறு கட்டி பிரித்து தனித்தனியாக பாராயணம் செய்ய வைத்தனர்.