​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்ய பயணத்தில் மோடிக்கு விருந்தளிக்கும் அதிபர் புடின்... ரஷ்ய வாழ் இந்தியர்களை சந்தித்து கலந்துரையாடும் பிரதமர் மோடி

Published : Jul 08, 2024 6:20 PM

ரஷ்ய பயணத்தில் மோடிக்கு விருந்தளிக்கும் அதிபர் புடின்... ரஷ்ய வாழ் இந்தியர்களை சந்தித்து கலந்துரையாடும் பிரதமர் மோடி

Jul 08, 2024 6:20 PM

ரஷ்யாவிற்கு 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, மாஸ்கோவில் நடைபெறவுள்ள இந்திய-ரஷ்ய ஆண்டு மாநாட்டில் அதிபர் புடினுடன் பங்கேற்கிறார். மாஸ்கோவில் பிரதமருக்கு அதிபர் புடின் தனிப்பட்ட இரவு உணவு விருந்தளிக்கவுள்ளார்.

பின்னர், ரஷ்யாவில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ள பிரதமர் மோடி, அதிபர் மாளிகையான கிரம்ளினுக்கு சென்று பார்வையிடவுள்ளார்.

ரஷ்ய பயணத்தின் போது அதிபர் புடினுடன் நடைபெறவுள்ள சந்திப்பில், இந்திய, ரஷ்ய உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து மோடி ஆலோசிக்கவுள்ளார்.