​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை மாநகர காவல் ஆணையர்... ரவுடிகளுக்கு புரியும் மொழியில் காவல்துறை நடவடிக்கை இருக்கும்: அருண்

Published : Jul 08, 2024 5:35 PM

சென்னை மாநகர காவல் ஆணையர்... ரவுடிகளுக்கு புரியும் மொழியில் காவல்துறை நடவடிக்கை இருக்கும்: அருண்

Jul 08, 2024 5:35 PM

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். காவல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு பேட்டியளித்த அவர், அதிகாரிகள் பொறுப்பு உணர்ந்து செயல்பட்டாலே குற்றங்கள் குறையும் என்றார்.

1998-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்.ஸாக தேர்வான அருண், கரூர், குமரி, திருப்பூர் மாவட்டங்களின் எஸ்.பி.யாகவும், சென்னையில் அண்ணா நகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆணையராகவும் பணியாற்றியவர்.

2012-இல் பதவி உயர்வு பெற்று திருச்சி சரக ஐ.ஜி.யாகவும், திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார். 2022-இல் ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராகவும் செயல்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றிய போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத நிலம் தொடர்பான சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிட கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தவர் அருண்.