கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் பராமரிப்பு பணிகளுக்காக 57 நாட்கள் நிறுத்தப்பட்டு இருந்த மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது. வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக மே மாதம் 13ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 562 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் அணு உலை தொடர்ந்து 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வரும் நிலையில், 2-வது அணு உலையும் ஓரிரு தினங்களில் படிப்படியாக ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என நிர்வாகத்தினர் கூறினர்.