நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட மேயரின்ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் கவுன்சிலர்கள் மேஜையை கைகளால் தட்டி ஒப்புதல் தெரிவித்தனர்.
ஆளுங்கட்சி கவுன்சிலர்களுடனேயே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தநிலையில், கடந்த வாரம் மாநகராட்சி ஆணையாளரிடம் மேயர் சரவணன்அளித்த பதவி விலகல் கடிதத்தின் மீது ஒப்புதல் பெறப்படும் நடவடிக்கைக்காக துணை மேயர் தலைமையில் மாமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போது மேஜையை தட்டி கவுன்சிலர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
இதேபோன்று கோவையில் நடைபெற்ற மாமமன்ற கூட்டத்திலும் மேயர் கல்பனா ஆனந்த குமாரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருக்கிறார் என தொடர்ந்து புகார் எழுந்த நிலையில், உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கடந்த மூன்றாம் தேதி அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கியிருந்தார்.