பழிக்குப் பழியாக திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் வினோத் என்ற ரவுடியை அடையாளம் தெரியாத சிலர் வெட்டி படுகொலை செய்தனர்.
கடந்த 2020ம் ஆண்டில் சுள்ளான் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
திண்டுக்கல்லில் எதிரிகளால் உயிருக்கு ஆபத்து இருப்பதால் திருப்பூரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
மனைவி மற்றும் குழந்தைகளை தன்னோடு திருப்பூருக்கு அழைத்துச் செல்ல திண்டுக்கல் வந்துள்ளார்.
வீட்டில் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய் கண்முன்னே வினோத்தை வெட்டி படுகொலை செய்தனர்.
போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.