ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக 5 முறை முயற்சி மேற்கொண்டதாகவும், அப்போது போதுமான ஆட்கள் தங்களிடம் இல்லாததால், திட்டத்தை கைவிட்ட நிலையில் 6-வது முயற்சியில் திட்டத்தை நிறைவேற்றியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆற்காடு சுரேஷ் இறந்த நாளிலிருந்தே ஆம்ஸ்ட்ராங்கை கண்காணித்து வந்ததாகவும், அவர் கட்டி வரும் வீட்டின் கட்டுமானப் பணியை பார்வையிட வருவார் என்பதை கணித்து ஸ்கெட்ச் போட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப் போகிறோம் என அழைத்தால் வர மாட்டார்கள் எனவே ஒரு பிரச்னை எனக் கூறி கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோரை ஆற்காடு சுரேஷின் உறவினர் மணிவண்ணன் என்பவர் அழைத்துச் சென்றதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.