ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கக் கோரி டெல் அவிவ் நகரில் போராட்டம் நடத்தியவர்களை போலிசார் அப்புறப்படுத்தினர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 9 மாதங்கள் ஆவதை நினைவுகூர்ந்து போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.
இஸ்ரேல் கொடியை ஏந்திக் கொண்டு போராட்டம் நடத்தியவர்கள், போர் நிறுத்தத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிக்க வேண்டும் என்று வலியுறத்தினர். பின்னர் ரயில் பாதையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தனர்.