41 ஆண்டுகளில் முதல்முறையாக ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் என்ற பெயரை மோடி பெறவுள்ளார்.
இருதரப்பு தூதரக உறவு தொடங்கி 75 ஆண்டுகளாகும் நிலையில் ஆஸ்திரியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை ஜூலை 9 மற்றும் 10ஆம் தேதிகளில் மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
தம்மை வரவேற்று ஆஸ்திரிய பிரதமர் கேரி நெகமரின் வெளியிட்ட சமூகவலைத்தள பதிவை இணைத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா, ஆஸ்திரியா இடையே புதிய துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டு அதிபர் புடினுடன் இந்தியா, ரஷ்யாவின் 22ஆவது ஆண்டு மாநாட்டில் பங்கேற்று இருதரப்பு ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.