ஸ்பெயினில் உலக புகழ்பெற்ற ஸ்பெயின் எருது விரட்டு விழா தொடக்கம்
Published : Jul 06, 2024 7:43 PM
உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்பெயினின் சான் பெர்மின் எனப்படும் 9 நாள் எருது விரட்டு திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது.
பாம்ப்லோனா நகர வீதிகளில் பாரம்பரிய இசை வாசிக்கப்பட்டு விழா துவங்கியது. அப்போது, வெண்ணிறாடை அணிந்து திரண்டவர்கள் குதித்து நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
விழா குழுவினர் வானவெடியை விண்ணில் ஏவி வெடிக்கச் செய்ததும் விழா முறைப்படி துவங்கியது.
9 நாள் விழாவின் ஒரு பகுதியாக ஏராளமான காளைகள் வீதியில் விரட்டப்படும். அப்போது, வீதியில் திரண்டிருக்கும் மக்கள் அக்காளைகளை எதிர்கொள்வர்.