​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை.. ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 4000 கன அடி நீர்வரத்து

Published : Jul 06, 2024 1:20 PM

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை.. ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 4000 கன அடி நீர்வரத்து

Jul 06, 2024 1:20 PM

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உள்ளது.

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி ,ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.