​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண இசை நிகழ்ச்சி.. பாலிவுட் திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பு

Published : Jul 06, 2024 12:15 PM

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண இசை நிகழ்ச்சி.. பாலிவுட் திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பு

Jul 06, 2024 12:15 PM

மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண இசை நிகழ்ச்சியில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மற்றும், கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வரும் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய பல்வேறு நிகழச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடிகர்கள் சல்மான்கான், ரன்பீர் கபூர், ஆலியாபட், திஷா பதானி, மவுனி ராய், மாதுரி தீட்சித், வித்யா பாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் தோனி, ஹார்திக் பாண்ட்யா, கிருனால் பாண்ட்யா, இசான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.