பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் கெய்ர் ஸ்டார்மெர் தலைமையிலான தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
ரிஷி சுனக் தலைமையிலான பழமைவாத கட்சிக்கு குறைவான இடங்களே கிடைத்த நிலையில், மக்கள் தீர்ப்பை ஏற்பதாகக் கூறி அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
மொத்தமுள்ள 650 இடங்களில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை என்ற நிலையில், 412 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. பக்கிங்ஹம் அரண்மனைக்கு சென்று மன்னரை சந்தித்த கெய்ர் ஸ்டார்மரை ஆட்சி அமைக்குமாறு மன்னர் அழைப்பு விடுத்ததுடன் பிரதமராக நியமித்து உத்தரவிட்டார்.
தேர்தல் முடிவு வெளியான பிறகு பேசிய கெய்ர் ஸ்டார்மெர், மக்கள் மாற்றத்தை விரும்பி தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்துள்ளதாக, தெரிவித்தார்.
தங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள பிரிட்டன் மக்களுக்கு நன்றிக்கடனை திருப்பிச் செலுத்த நேரம் வந்துள்ளதாக கூறிய அவர், உடனடியாக பிரிட்டனின் நிர்வாகத்தை சீர்ப்படுத்தும் பணிகளை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.