பயங்கரவாத அமைப்பு ஆயுதம் வாங்க நிதி உதவி செய்தது ஏன் எனக் கேட்டு சென்னையைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபரிடம் மிரட்டி பணம் பறித்த மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரமேஷ் பாபுவை வாட்ஸ் ஆப் காலில் அழைத்த நபர், தாம் சி.பி.ஐ. ஆய்வாளர் என்றும், ரமேஷ் பாபுவின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து பல்வேறு வங்கிகளில் இருந்து 25 லட்ச ரூபாய் கடன் பெறப்பட்டு இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.
அந்த 25 லட்ச ரூபாய் பயங்காரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் வாங்க அனுப்பப் பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ. அதிகாரி என்று பேசியவர் மிரட்டியதாக ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
இந்த சிக்கலில் இருந்து மீள வேண்டும் என்றால், ரமேஷ் பாபு கணக்கில் உள்ள பணம் மொத்ததையும் தாம் கூறும் வங்கிக் கணக்குக்கு விசாரணைக்காக மாற்றுமாறும் சி.பி.ஐ. அதிகாரி என்று கூறிக் கொண்டவர் சொன்னதாக தெரிகிறது.
அதை நம்பி 8 தவணைகளாக 64 ஆயிரம் ரூபாயை தாம் அனுப்பியதாக தெரிவித்த ரமேஷ் பாபு, மறுநாள் தமது வங்கிக்கு நேரில் சென்று விசாரித்த போது தான், தாம் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாகவும் கூறினார்.