​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதகையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிலத்தை கையகப்படுத்திய அரசு... மைதானத்தில் சுற்றுச் சுழல் பூங்கா அமைக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை

Published : Jul 05, 2024 5:41 PM

உதகையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிலத்தை கையகப்படுத்திய அரசு... மைதானத்தில் சுற்றுச் சுழல் பூங்கா அமைக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை

Jul 05, 2024 5:41 PM

உதகையில் குதிரை பந்தயத்திற்கு பிரசித்தி பெற்ற மெட்ராஸ் ரேஸ் கிளப் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கியை தராததால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிலம் கையகப்படுத்தப்பட்டு சுற்று சூழல் பூங்கா அமைப்பதற்காக தோட்டக்கலைத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

உதகை நகராட்சிக்கு சொந்தமான இடத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து இங்கு குதிரை பந்தையம் நடத்தி வந்த நிலையில் அரசுக்கு செலுத்த வேண்டிய 822 கோடி ரூபாய் குத்தகை பாக்கியை தராததால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி 52.34 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.