​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை நிகழ்வுகள்

Published : Jul 05, 2024 4:18 PM

அமெரிக்க சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை நிகழ்வுகள்

Jul 05, 2024 4:18 PM

அமெரிக்க சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாஷிங்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் வானத்தை வண்ணமயமாக்கும் வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன. தலைநகர் வாஷிங்டன் நேஷனல் மால் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை 17 நிமிடங்கள் நீடித்தது.

அமெரிக்க சுதந்திர தின விழாவை முன்னிட்டு நியூயார்க் நகரில் இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. ஹட்சன் நதி அருகே நடத்தப்பட்ட வாண வேடிக்கை நிகழ்வுகள் கூடியிருந்த பார்வையாளர்களிடம் பரவசத்தை ஏற்படுத்தியது. வானில் 300 மீட்டர் தொலைவுக்கு ராக்கெட் வெடிகள் அனுப்பி வெடிக்கச் செய்தனர்.