பிரிட்டன் மக்கள் மாற்றத்தை விரும்பி தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்துள்ளதாக, புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ள கியெர் ஸ்டார்மெர் தெரிவித்தார்.
650 இடங்களைக் கொண்ட பிரிட்டன் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கு படுதோல்வி அடைந்தது.
கியெர் ஸ்டார்மெர் தலைமையில் போட்டியிட்ட தொழிலாளர் கட்சி 400-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சியை மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளதாக தேர்தல் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்டார்மெரை பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் லண்டனில் மக்களிடையே பேசிய ஸ்டார்மெர், மாற்றத்தை விரும்பி தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.