செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளோடு புறப்பட்ட அரசு பேருந்து, சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி, வலதுபுறமாக திரும்பி, சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட் வழியாக செல்வதற்காக, சாலையை கடக்க முயன்றது.
அப்போது, அரசு பேருந்து கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநர் நடத்துநர், மற்றும் பயணிகள் என 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அரசு பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால், நேரிட்டதாக கூறப்படும் விபத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.