தூத்துக்குடியில் , வேலவன் ஹைபர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கேஎஃப்சி உணவகத்தில் நடத்திய சோதனையில், உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசயம் சிலிக்கேட் சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை பழைய உணவு எண்ணெயை தூய்மைப்படுத்த பயன்படுத்தியது கண்டறியப்பட்டதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
இதனையடுத்து அந்த உணவகத்தின் உரிமம் இடைக்காலமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக், இதனைக் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய், முன்தயாரிப்பு செய்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கன் ஆகிவற்றையும் பறிமுதல் செய்ததாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.