​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவை உறுப்பினர் உறுதிமொழி வாசிப்பு விதிகளில் திருத்தம்

Published : Jul 05, 2024 8:36 AM

மக்களவை உறுப்பினர் உறுதிமொழி வாசிப்பு விதிகளில் திருத்தம்

Jul 05, 2024 8:36 AM

மக்களவையில் உறுப்பினராக பதவி ஏற்பவர், அனைத்து மொழிகளிலும் அச்சிட்டு வழங்கப்படும் வாசகங்களை மட்டுமே வாசித்து உறுதிமொழி ஏற்கும் வகையில், விதிகளில் மூன்று உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக  மக்களவை செயலகம் கூறியுள்ளது.

உறுதிமொழி வாசிக்கும்போதும், அதற்கு முன்பும், பின்பும் கூடுதலாக எந்த வாசகத்தையோ, பெயரையோ முழக்கமோ உச்சரிக்கக் கூடாது என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை மீறி கூடுதலாக வாசகங்களை சேர்த்தால் என்ன நடவடிக்கை என்று சபாநாயகர் உத்தரவில் கூறப்படவில்லை என்றாலும், உள்ளதை உள்ளபடி  உறுதிமொழியை வாசித்தால் மட்டுமே பதவியேற்பு செல்லுபடியாகும் என்பதை திருத்தப்பட்ட விதிகளின் உள்ளார்ந்த அர்த்தம் என்று மக்களவை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதன்மூலம், மக்களவை உறுப்பினர் பதவி ஏற்பின்போது விருப்பப்படி முழக்கங்களை எழுப்ப கடிவாளம் போடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்