பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்க முடியாது என்றும், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பவர்களை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமரின் உரையை வாசித்தார்.
அதில், எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ளவும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பது, பிரசாரம் செய்வதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் அவசியம் என பிரதமர் கூறியுள்ளார்.
பருவ நிலை மாற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறத்தி பிரதமர், மாற்று எரிபொருளுக்கு மாறுதல், மின் வாகனப் பயன்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.