​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சைப்ரஸ் நாட்டின் மலை உச்சியில் விண்வெளி ஆய்வுக்கூடம் திறப்பு

Published : Jul 04, 2024 4:47 PM

சைப்ரஸ் நாட்டின் மலை உச்சியில் விண்வெளி ஆய்வுக்கூடம் திறப்பு

Jul 04, 2024 4:47 PM

சைப்ரஸ் நாட்டின் ட்ரூடோஸ் மலைத் தொடரில் சயின்ஸ் பிக் ஷன் திரைப்படங்களில் வருவதைப் போன்ற விண்வெளி ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் ஆதரவுடன் பொது மக்களிடம் திரட்டப்பட்ட 2 மில்லியன் டாலர் மதிப்பில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து மிகப்பெரிய இயந்திர மவுண்டில் பொருத்தப்பட்டுள்ள பிரதிபலிப்பு தொலை நோக்கி மற்றும் சூரிய தொலை நோக்கி வாயிலாக விண்வெளி செயல்பாடுகளை ஆராய முடியும் என்று தெரிவித்த விஞ்ஞானிகள், கிரகங்கள், விண்மீன்கள் மற்றும் சந்திரனின் மேற்பரப்பை தொலைநோக்கி மூலம் இரவில் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்றும் கூறினர்.