அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக்கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் ஜோ பைடனுக்கு பதிலாக தான் போட்டியிடவில்லை என துணை அதிபர் கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பிடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
நேரடி விவாதத்தின் போது பைடன் பின்தங்கியதாக கூறப்பட்டதால் சி.என்.என் எடுத்த கருத்துக் கணிப்பில் ஜோபைடனை விட வம்சாவளி இந்தியரும், துணை அதிபருமான கமலா ஹாரிசுக்கு அதிக ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தங்களது கட்சியின் வேட்பாளர் ஜோபைடன் தான் அவருக்கு தான் உறுதுணையாக இருப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.