பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் எதிர்க்கட்சியினரின் அணுகுமுறை மிகவும் கவலை அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அவர், மேற்கு வங்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றார்.
மறுபுறம், பெண்களின் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் நலன் கருதி மத்திய அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடு கடந்த 10 ஆண்டுகளில் கண்டுள்ள வளர்ச்சி வெறும் தொடக்கம் தான் என்றும் இன்னும் பல படிகள் நாடு வளரப் போவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வறுமையை ஒழிக்கவும் அரசு போராடும் என்று தெரிவித்த அவர், இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்போது, அதன் தாக்கம் அனைத்து துறைகளிலும் இருக்கும் என்றார்.