உத்தரப்பிரதேசம் ஹத்தரஸில் நடைபெற்ற சத்சங்கம் நிகழ்ச்சியில் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் நிலையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த போலே பாபா என்ற ஆன்மீகத் தலைவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய கூட்டத்திற்கு ஒருலட்சம் பேர் திரண்டனர். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே யார் இந்த போலே பாபா என்று பலரும் ஆர்வமாக விசாரித்து வரும் நிலையில் இவர் ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரி என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாரயண் சாகார் ஹரி என்ற பெயருடைய அவர் போலே பாபா என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
26 ஆண்டுகளுக்கு முன்பு தமது உளவுத்துறை அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய அவர், ஆன்மீக சொற்பொழிவுகளில் ஈடுபாடு கொண்டார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஹரியானா. மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் அவருடைய பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் பெருகியது.
செவ்வாய்க்கிழமைகளில் வெள்ளை ஆடையில் பிரசங்கம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் இடம்பெறுவதை விரும்பாத போலே பாபா கோவிட் காலங்களிலும் பெரும் கூட்டத்தைக் கூட்டி சர்ச்சைகளுக்கு ஆளானார்.