கடந்த 16ஆம் தேதி மும்பையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த குர்லா விரைவு ரயிலில் பயணம் செய்த தங்க வியாபாரியிடம் தகராறு செய்து 595 கிராம் தங்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த திருப்பூர் இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித் திரிந்த 6 பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.