ஜமாத் நிர்வாகம் ஊரை விட்டு விலக்கி வைப்பதாக அறிவித்திருப்பதால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாகக் கூறி ஆட்டோ கேப்ஸ் தொழில் நடத்தி வரும் ஜமால் முகமது என்ற நபர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமது எட்டு வயது மகனுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார்.
திருவிடைவாசலைச் சேர்ந்த அவர் மீது சாலையில் வாகனம் நிறுத்தியது தொடர்பாக சக இஸ்லாமியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஜமாத் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. தமது ஆட்டோவில் ஏறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்போம் என ஜமாத் நோட்டீஸ் அடித்து வீடு வீடாக கொடுத்துள்ளதாகவும் ஜமால் முகமது கூறினார்.