​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்ப்பிணியை அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ்... இருசக்கர வாகனம் மீது மோதி ஒருவர் உயிரிழப்பு..

Published : Jul 01, 2024 3:05 PM

கர்ப்பிணியை அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ்... இருசக்கர வாகனம் மீது மோதி ஒருவர் உயிரிழப்பு..

Jul 01, 2024 3:05 PM

ஒசூர் -ராயக்கோட்டை சாலையில் நேற்றிரவு ஹரீஷ், மோகன் என்ற இரண்டு இளைஞர்கள் இருசக்கரவாகனத்தில் பயணித்தபோது விபத்தில் சிக்கிய இருவரையும் அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதில் ஹரீஷ் உயிரிழந்த நிலையில் மோகன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒசூர் நகர போலிசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில்  கர்ப்பிணியை அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனம் மீது மோதியதாக கண்டறிந்த போலீசார், அதன் ஓட்டுநரை கைது செய்து விசாரிக்கின்றனர்.