தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி மலையில் உள்ள சுருளி வேலப்பருக்கு பால், தயிர் உள்ளிட்ட 21 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் 108 விதமான மூலிகைப் பொருள்களால் நீராட்டுதலும், தொடர்ந்து மலர் அலங்காரமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பின்னர் மலை உச்சியில் உள்ள அஷ்ட லிங்கத்துக்கு மூலிகைப் பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.