2030ல் அப்புறப்படுத்தப்படவுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் - எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம்
Published : Jun 29, 2024 7:06 PM
2030ல் அப்புறப்படுத்தப்படவுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் - எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம்
Jun 29, 2024 7:06 PM
சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து அப்புறப்படுத்த, சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆராய்ச்சிப் பணிகளுக்காக 1998ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா நாடுகள் இணைந்து பராமரித்து வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இதன் பணிக்காலம் வரும் 2030 ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தை அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து அப்புறப்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், "டி-ஆர்பிட் வெஹிகிள்" வாகனத்தை கட்டமைக்க உள்ளது.